தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் - ரணில் அறிவிப்பு!
#SriLanka
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து நிவாரணப் பயனாளிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வசும வேலைத்திட்டம் தொடர்பில் வில்கமுவ பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிவாரணம் மற்றும் பரம்பரைப் பலன்களை மக்களுக்கு விரைவாக வழங்குவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



