ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி குறித்து வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Election
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எந்த தேர்தலையும் நடத்த ஆணையம் தயாராக உள்ளது என்றார். அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடமே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பட்ஜெட்டில் அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டால் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.



