இந்துசமுத்திரம் மீண்டும் உலகப் பொருளாதாரத்தின் மையப்பகுதியில்! சிவசங்கர் மேனன்

உலக பொருளாதாரத்தின் மையப்பகுதியில் மீண்டும் இந்து - பசிபிக் பிராந்தியம் நிலைக்கொள்கின்றது.
மூடப்பட்ட ஒரு புவியியலை இன்று உலகில் காண இயலாது. புவிசார் அரசியலின் மேலடுக்கு உண்மையான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜதந்திரியுமான சிவசங்கர் மேனன் தெரிவித்தார்.
கொழும்பில்; புதன்கிழமை (28) இடம்பெற்ற இந்துமா சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
இந்து - பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக கடந்த பல வருடங்களாக கலந்துரையாடி வருகின்றோம். இவ்வகையான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது தொடர்பில் பாத்பைண்டர் மன்றத்திற்கு நன்றி கூறுகின்றேன்.
அவற்றை கருத்தில் கொள்ளும் பொது இன்று நான் முக்கியமான தருணத்தில் உள்ளளோம் என்பதை உணர முடிகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்றை நினைவுக்கூர்ந்து இன்று நாம் எங்கு உள்ளோம் என்பதை கூறினார். உலக பொருளாதாரத்தின் மையப்பகுதியில் மீண்டும் இந்து - பசிபிக் பிராந்தியம் நிலைக்கொள்கின்றது.
மூடப்பட்ட ஒரு புவியியலை இன்று உலகில் காண இயலாது. திறந்ததும் வெளிப்படையானதுமான உலக பூவி சார்ந்த போக்கே எம்முன் உள்ளது. ஆனால் இன்றைய சூழல் பல சிக்கல்களுக்கு உள்ளானதாகவே உள்ளன. உலகம் எதிர்கொள்கின்ற பொதுவான பல்துறைசார்ந்த அச்சுறுத்தல்களும் சவால்களும் இந்து மா சமூத்திரத்தை சூழ காணப்படுகின்றன.
இவை இந்து மா சமூத்திரத்தின் பாதுகாப்பு எச்சரிக்கைகளாகவே உள்ளன. செங்கடலில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஹெளதி குழுக்களின் செயல்பாடுகளினால் உலக கப்பல் போக்குவரத்தின் 90 வீதம் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான செயல்பாடுகளினால் பல தீவு நாடுகளின் கடல் இறையாண்மை அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது.
இதனை தவிர கால நிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்று பல்வேறு சவால்கள் எம்முன் உள்ளன. அனால் இவற்றை மேலும் ஆபத்தாக்க கூடிய வகையில் இரு விடயங்கள் காணப்படுகின்றன. அதாவது புவிசார் அரசியலின் மேலடுக்கு உண்மையான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஆதிக்கத்தை செலுத்துகின்றது.
நிலையான உலக ஒழுங்கு இன்னும் ஸ்தீரப்பட வில்லை. அமெரிக்காவின் மீள் எழுச்சி மற்றும் சீன நலன்கள் என பேசலாம். ஆனால் ரஷ்ய - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் போன்ற உலகின் நெருக்கடிக்கான தலைப்புகளின் பட்டியல் மிக நீண்டதாக உள்ளன. நில பரப்புககளை எல்லையாக கொண்ட நேபாளம் எதிர்க்கொண்டுள்ள நிலைமைகளை கருத்தில் கொள்ளுங்கள்.
எனவே ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்நோக்கு திட்டங்களை உள்ளடக்கிய அமைப்புகளை நம்பியிருப்பது எந்தளவு சாத்தியம் என்பதையே உணர்த்துகின்றன என்றார்.



