இந்து சமுத்திரத்தை பாதுகாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது - ரணில்!

இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை பாதுகாக்கும் நோக்கில் மூலோபாய ஸ்திரத்தன்மைக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடற்படை சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்பு காரணமாக சிவப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிக்க இலங்கை தீர்மானித்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆறு நாள் யுத்தம் காரணமாக 10 வருடங்களாக சூயஸ் கால்வாய் மூடப்பட்டமை கொழும்பு துறைமுகத்தில் எவ்வாறு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடல்சார் நடவடிக்கைகளுக்கு தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (28.02) ஆரம்பமான 'பாத் ஃபைண்டர்' அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டின் மூன்றாம் கட்ட மாநாட்டின் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், . இந்து சமுத்திரத்தை "ஒரு பட்டை ஒரு பாதை" அல்லது இந்தோ-பசிபிக் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக கருத முடியாது எனவும், இந்து சமுத்திரமானது தற்போது உலகின் மூலோபாய புவிசார் அரசியல் பிராந்தியமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்து சமுத்திரப் பிராந்தியமானது தற்போது வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரமாக மாறியுள்ளதால், போட்டியின்றி இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



