திடீரென இலங்கைக்கு வந்த இந்திய கப்பல்கள்! காரணம் என்ன?

#India #SriLanka #Colombo #Ship
Mayoorikka
1 year ago
திடீரென இலங்கைக்கு வந்த இந்திய கப்பல்கள்! காரணம் என்ன?

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளன. இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன.

 இந்த கப்பல்கள் நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இவை மார்ச் முதலாம் திகதி வரை காலியில் தரித்திருக்கவுள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 குறித்த கப்பல்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, மார்ச் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.

 இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தீயணைப்பு, சேதங்களைக் கட்டுப்படுத்துதல், சமுத்திர பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!