இங்கிலாந்தில் உயிரிழந்த இலங்கை மாணவரின் மரணம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
டினால் டி அல்விஸ் என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு மர்மமான முறையில் கடந்த 2022.02.27 அன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கால்பந்து மற்றும் ரக்பி வீரரான தினால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக அவருடைய பெற்றோர் தெரிவித்தனர்.
அப்போது டினாலின் மரணம் தற்கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்தன.
இதன்படி நிர்வாண புகைப்படங்களை வெளியிடுமாறு சிலர் விடுத்த மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இருப்பினும், விபிஎன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நைஜீரியாவிலிருந்து டினாலுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.



