கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்!
#SriLanka
#Arrest
#Crime
Mayoorikka
1 year ago

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மாலம்பே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் கனடாவில் கணக்காளராகக் கடமையாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் சுமார் 8 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் இவர் மாலம்பே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .



