குளத்தில் தாமரை பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

#SriLanka #Trincomalee #Death #water #Flower #drowned
Prasu
2 years ago
குளத்தில் தாமரை பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பரிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் கனகசுந்தரம் விவேகானந்தன் (33வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு நண்பருடன் தாமரைப்பூ பறிப்பதற்காக பைபர் படகில் இருவரும் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்ததாகவும், 

இதனையடுத்து தனக்கு பாதுகாக்க முடியாத நிலையில் நீந்தி கரைக்கு வந்ததாகவும் சக நண்பர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். நீரில் மூழ்கி உயிரிழந்த நபரை திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

 குறித்த சம்பவம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4