இலங்கை தொடர்பான தீர்மானங்கள்: பொறிமுறையை மீண்டும் நிராகரித்தது இலங்கை

#SriLanka #M. K. Stalin
Mayoorikka
1 year ago
இலங்கை தொடர்பான தீர்மானங்கள்: பொறிமுறையை மீண்டும் நிராகரித்தது இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் வாக்குவங்கி அரசியல் அல்லது குறுகிய அரசியல் நோக்கங்களுக்குள் சிக்குப்படக்கூடாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார் ஐநா மனித உரிமை பேரவைக்கான உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 இலங்கை கடுமையான தடைகளை எதிர்நோக்குகின்ற போதிலும் மக்களிற்கு பயன் அளிக்ககூடிய ஆக்கபூர்வமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வேலைதிட்டங்களுடன் தொடர்ந்தும் தீவிரமாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டுவருகின்றது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகளின் தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது என்பமை மீண்டும் வலியுறுத்தியுள்ள அலிசப்ரி இந்த தீர்மானங்கள் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறான பொறிமுறைகள் ஆக்கபூர்வமற்றவை எதிர்மறையானவை எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இவ்வாறான பொறிமுறைகள் பயன் அற்றவை மனித உரிமை பேரவை ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளிற்கு எதிரானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையின் அணுகுமுறை அதன் நம்பகதன்மைக்கான ஒரு அமிலபரிசோதனையாக அமையும் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!