நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐக்கிய மக்கள் சக்தியாலேயே தீர்க்க முடியும் - சஜித்!

இலங்கை இன்று எதிர்நோக்கும் ரூபா மற்றும் டொலர் நெருக்கடியை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சதிஜ் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிஸாவில்ல புவக்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் தம்மையும், தமது அணியையும் நம்பினால் நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை தீர்க்க பாடுபடுவேன் என்றும்அதற்கான திட்டம் தனது அணியில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வீட்டுப் பணிப்பெண்கள் என்ற கருத்தாக்கத்தைத் தவிர்த்து புதிய திறன்களுடன் பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் பெண்கள் தகவல் தொழில்நுட்பத்தில் வலுப்பெற வேண்டும் என்கிறார். பெண்களை சாப்ட்வேர் என்ஜினீயர்கள், சுகாதார வசதிகள், செவிலியர்கள் என வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



