பெலியத்த துப்பாக்கிச்சூடு : முக்கிய குற்றவாளிகள் டுபாயில் கைது!

பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் வைத்து 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் குறித்த இருவரும் இருந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐந்து பேரின் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தற்போது கொஸ்கொட சுஜீ குழுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது. எனினும், இந்த கைது தொடர்பாக துபாய் அரசு இதுவரை அதிகாரபூர்வமாக அரசுக்கு அறிவிக்கவில்லை.
சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



