கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரு தமிழர்கள்!

#SriLanka #Arrest #Airport #Katunayaka
Mayoorikka
1 year ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்ட இரு தமிழர்கள்!

மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்த இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை (23) அதிகாலை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடையவர், மற்றையவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர்.

 அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். 

 முதலில் கத்தாரின் தோஹாவுக்கும், அங்கிருந்து பிரான்ஸின் பாரிஸுக்கும் கடைசியாக ஜெர்மனியின் மூனிச் நகருக்கும் செல்ல திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!