அறிவு, வலிமையான ஆண்களை பெண்கள் விரும்புவார்களா?

#Health
Mugunthan Mugunthan
2 months ago
அறிவு, வலிமையான ஆண்களை பெண்கள் விரும்புவார்களா?

ஆண்கள் பொதுவாக தன் மீது மற்றவர்கள் அன்பு கொள்ள தமது வலிமை மற்றும் அறிவு என்பதைப்பயன்படுத்துவார்கள். "அறிவு"ள்ள ஆண்களை விட தன்மேல் அளவு கடந்த "அன்பு"கொள்ளும் ஆண்களைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள்.

இதற்காக அவர்கள் ஜிம்மிற்கும் அறிவைத் தேடுவதற்கு கல்விகளைக் கற்கவும் நன்கு அறிவர்..அறிவாளி மனைவியானாலும் கணவன் அப்பாவியாக இருக்க வேண்டும் என நினைப்பது பெண்களுடைய இயல்பு..

உதாரணமாக பெண்ணாய் பிறந்ததில் இருந்து பாட்டி, அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக் காரர்கள், தெருவில் போவோர் வருவோர் போதாக் குறைக்கு பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர்கள்..அப்பப்பா..அறிவு மழையில் நனைந்து நனைந்து..ஜலதோஷம் பிடித்து, இருமி, தும்மி, தொண்டை அடைத்து போதும்டா சாமி.. போற வீட்டிலேயாவது கணவன் என்கின்ற ஒரு உயிரினமாவது நம் மேல் அன்பு காட்ட மாட்டாரா..என்ற ஏக்கத்திலும், மாறுதலுக்கும் நாம் துவளும் போது தோள் கொடுக்க ஒரு தோழனைத்தான் தேடுவார்களே ஒழிய .. அங்கேயும்..தன் அறிவை உபயோகப் படுத்தி சாயும்போது அய்யயோ..சட்டை அழுக்காகி விடும்..This Shirt Material Is Very Costly..I Am Very Hygienic..So. Please Don't Touch My Shirt..சொன்னால்.. அடப் போய்யா..நீயும் உன் சட்டையும்..என்றாகி விடும்.. 

 ஆண்கள் அழகான சட்டை போட்டிருந்தால் கூட மனைவி தோளில் சாயும்போது சட்டை அழுக்காகி விட்டால்..It's Ok. Be Normal..என்று நினைக்கும் ஆண்கள்தான் பெண்களுக்கு வேண்டும்.. 

மனைவியிடம் எல்லாம் தெரிந்திருந்தாலும் ஒன்றும் தெரியாத அப்பாவி ஆண் மகனாக, அன்பானவனாக, நல்ல தோழனாக இருந்தால் மட்டும் போதும்.. ஆண்களுடைய அறிவை அலுவலகத்தில் உபயோகப்படுத்தினால் Atleast.. Insentive, Promotion, Family Status அனைத்தும் கிடைக்கும்..

ஆண்கள் பொதுவாக தம்து பலதையும் அறிவையும் காட்ட குடும்பம் ஒன்றும் Interview இடமல்ல..Intraction ஏற்படக் கூடிய இடம்..ஆகவே அவர்கள் மற்றவர்களிடம் தமது அன்பைக்காட்டி நல்ல இல்லறம் அமைக்கலாம். இல்லையேல் வீடு ஒரு ஜிம்மாகத்தான் ஆகும்.