நிதி பற்றாக்குறையால் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது!

#SriLanka #Mullaitivu #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நிதி பற்றாக்குறையால் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது!

கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிதி பற்றாக்குறையா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். 

கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.  

வழக்கு எடுத்து கொள்ளப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அத்துடன் அகழ்வு பணியினை கொண்டு நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை. இது தொடர்பாக அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 

திட்டமிட்டபடி நிதி கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4