மொழி மனித இனத்தின் நாகரீக பரிணாமத்தின் ஆரம்பம்! இன்று தாய் மொழி தினம்

#SriLanka #Tamil #language
Mayoorikka
2 months ago
மொழி மனித இனத்தின் நாகரீக பரிணாமத்தின் ஆரம்பம்! இன்று தாய் மொழி தினம்

உலகில் ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் இருந்தாலும், தாய்மொழி வாயிலாகவே ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்ய தொடங்குவார் .

மக்கள் எத்தனை மொழியை  தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும் தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

  அந்த வகையில், தாய்மொழி சிறப்பை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 உலகில் கிட்டத்தட்ட 7000 மொழிகள் இன்னும் சில பரம்பரைகளோடு அழிந்து போகலாம். இந்த அழியும் அபாயத்தில் உள்ள மொழிகளில் 96 சதவீதமானவற்றினை இந்த உலகில் வாழும் வெறுமனே 4 சதவீத மக்களே பேசுகின்றனர். 

இதில் சில நூறு மொழிகளே கல்விச் செயற்பாடுகளுக்கும் ஏனைய பொது விடயங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. நூற்றுக்கும் குறைவான மொழிகளே தற்போதைய இணையம் போன்ற டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன.

 மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி அளவில் பெருமித்தத்தைக் கொண்டிருக்கின்றது. 2032 ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற தொனிப்பொருளின் கீழ் இன்றைய நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த பெருமிதத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் மொழி தாய்மொழி அமைந்துள்ளது.

 அப்படிபட்ட மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த சில இளைஞர்களை நினைவுகூரும் நாளே தாய்மொழி தினமாக மாறியது.

 மொழி மனித இனத்தின் நாகரீக பரிணாமத்தின் ஆரம்பப் படிநிலைகளில் ஒன்றான மொழி தகவல் தொடர்பிற்கு பயன்படுத்தப்படும் கருவியாக மாத்திரமின்றி ஒரு சமூகத்தின் பண்பாட்டுடனும் , கலாசாரத்துடனும் ஒன்றிணைந்து சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனமாகவே மொழி திகழ்கின்றது.

 சர்வதேச தாய்மொழி தினம் எவ்வாறு உருவானது?

 இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் வங்காளதேசத்தில் உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியை , வங்காள தேசத்தில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை.

 இதனையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி 'வங்க மொழி இயக்கம்' உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 காவல்துறையின் நடவடிக்கைகளினால் 04 மாணவர்கள் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியதை தொடர்ந்து, 1956ஆம் ஆண்டு, வங்களாதேசத்தின் தாய்மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, டாக்காவில் இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக வருடந்தோறும் , பெப்ரவரி 21ம் திகதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

 இந்த தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். 

 தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பெப்ரவரி 21 ஆம் திகதியை 1999 ஆம் ஆண்டு சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21 ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது. மொழி என்பது தகவல் தொடர்பாடலுக்குப் பயன்படும் ஒரு கருவி மாத்திரமல்ல. 

அது பேசப்படும் சமூகத்தினதும் நிலப்பரப்பினதும் பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனமாகவும் ஒரு சமூகத்தின் கலாசாரம் எந்தளவிற்கு மேன்மையும் தொன்மையும் கொண்டது என்பதற்குக் குறியீடாகவும் திகழ்கிறது. ஒவ்வொருவரதும் சிந்தனை ஆற்றலுக்கு அவரது தாய்மொழியே பெரிதும் துணைநிற்கிறது. 

ஆக்கபூர்வமான சிந்தனைகள் முதலில் தாய்மொழியிலேயே ஊற்றெடுக்கின்றன. இதனாலேயே பிள்ளைகள் தமது ஆரம்பக் கல்வியை அவர்களது தாய்மொழியில் கற்றுக் கொள்வதே சிறந்தது என கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம், மலே, மேமன் மற்றும் வேடுவ (வெத்தா) மொழிகள் தாய் மொழிகளாக மக்களால் பேசப்படுகின்றன. தாய்மொழி என்பது ஒவ்வொரு சமூகத்தினருக்குமான தனித்துவமான அடையாளமாகும். 

நாம் ஒவ்வொருவரும் எமது தாய்மொழியை நேசிப்பதோடு ஏனைய மொழிகளையும் அதன் கலாசார பாரம்பரியங்களையும் மதித்து நடக்க கடமைப்பட்டுள்ளோம். 

மொழி அடிப்படையில் மக்களிடையே பாகுபாடுளைக் காட்டாதிருப்போம். மொழி மற்றும் கலாசார பன்மைத்துவத்தை மதித்து மானுட வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பங்களிப்புச் செய்வோம்.

 உலக நாடுகள் பலவற்றில் இன்று தமிழர்கள் குடியேறி, வாழ்ந்தும் பல சாதனைகள் புரிந்தும் வருகின்றனர்.

 வாழ்ந்தும் பல சாதனைகள் புரிந்தும் வருகின்றனர். நாட்டின் உடன் பிறப்புகளோடு உறவாட ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை கற்றாலும் நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்க தாய் மொழியான தமிழில் கல்வி கற்று தமிழர்களோடு தமிழில் உரையாடி தாய் மொழியை வளர்ப்போம்.