மீன ராசியினருக்கு பணிபுரியும் இடத்தில் சகபணியாளரால் சங்கடங்கள் தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
மீன ராசியினருக்கு பணிபுரியும் இடத்தில் சகபணியாளரால் சங்கடங்கள் தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பரணி: தைரியம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் வாடிக்கையாளர் விருப்பமறிந்து செயல்படுவீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். அலுவலகத்தில் உண்டான பிரச்னைகள் விலகும். ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நிதிநிலை சீராகும். உங்கள் சங்கடம் தீரும். மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் என்றாலும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருவாதிரை: செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அடுத்தவருடன் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். புனர்பூசம் 1,2,3: விழிப்புடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் சங்கடம் அதிகரிக்கும். பணி நிமித்தம் அவசர பயணம் மேற்கொள்வீர்கள். பூசம்: எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வரும் என்றாலும் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். ஆயில்யம்: சுறு சுறுப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள் என்றாலும் மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். பூரம்: தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். நண்பர்களால் ஆதாயமும் பணவரவும் அதிகரிக்கும். உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். அஸ்தம்: பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சித்திரை 1,2: தடைப்பட்டிருந்த முயற்சி நிறைவேறும். விலகிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் வருவார்கள்.

துலாம்

சித்திரை 3,4: பண வரவில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்கள் செயல்களில் ஆதாயம் உண்டாகும். சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். நண்பர்கள் ஆலோசனை நன்மையை உண்டாக்கும். விசாகம் 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும், உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.

விருச்சிகம்

விசாகம் 4: பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும், செயல்களில் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். அனுஷம்: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். கேட்டை: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரம் லாபமாக செல்லும்.

தனுசு

மூலம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும், பூராடம்: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்பட்டு வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: பகைவர்கள் தொல்லை விலகும். நீண்டநாள் பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள். திருவோணம்: ஆரோக்கியம் சீராகும், உங்கள் மீது ஏற்பட்ட பழி விலகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவிட்டம் 1,2: உங்கள் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சதயம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு புத்தி சாதுரியமாக செயல்பட்டு தீர்வு காண்பீர்கள். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும், செயல்களில் சாதக நிலை உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிகள் தோன்றும். புதிய நண்பர்களால் பிரச்னைகளை சந்திப்பீர்கள். உத்திரட்டாதி: சகபணியாளரால் சில சங்கடங்கள் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். ரேவதி: உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.