வெற்றி எம்மை வந்து சேர வியாழக் கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 5

#Astrology #Lifestyle #Day #work
Mugunthan Mugunthan
2 months ago
வெற்றி எம்மை வந்து சேர வியாழக் கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 5

இன்றைய பதிவில் நாம் எந்தக்கிழமை நாளில் என்ன வேலை செய்யலாம் என்றும் அது அன்று செய்வதானல் எமக்கு வெற்றியளிக்குமா என்பதனையும் நாம் ஜோதிட நிபுணர்களால் கிழமை நாட்களிற்கு ஒதுக்கிய வேலைகள் தொடர்பில் பார்க்கலாம்.

 பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலை செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும். அதே சமயம் வியாழன் தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

வியாழக்கிழமை

  • கடவுள் படங்கள், சிலைகள் வாங்குதல், 

  • பிதிஷ்டை செய்தல்,
     
  • சுபகாரியங்கள் செய்தல், 

  • குழந்தைகளுக்கு பெயர் சூட்டல்,

  •  தியானம் பழகத் தொடங்கல், 

  • போர்வெல்-கிணறு போடுதல், 

  • வேதம் கற்றிடத் தொடங்குதல்,

  •  தட்சிணாமூர்த்தியை வணங்கி அன்னதானம் வழங்குதல்,

  • அறிஞர்கள் உரை கேட்டல், மகான்களை தரிசித்தல் ஆகியன செய்யலாம்.

மீண்டும் நாளை நாம் வெள்ளிக்கிழமைகளில் என்னென்ன காரியங்களை செய்தால் வெற்றி எம்மை சேரும் என்ற பதிவு சந்திக்கின்றோம். அதுவரை லங்கா4 உடன் இணைந்திருங்கள்.