யாழ்ப்பாணம் - மாக்கிராய் பகுதியில் நெல்லை உலர்த்த முற்பட்ட நபருக்கு நேர்ந்த சோகம்!

கொடிகாமம் கச்சாய்- புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் நெல்லை உலரவிட முற்பட்ட ஒருவர் மீது அவ்வீதியூடாக பயணித்த மோட்டார் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் நெல்லை பரவிக்கொண்டிருந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
காலையில் அதிக பனி மூட்டம் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை அதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பில் பரித்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



