சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 08 பேர் கைது!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news #Ciggerette
Thamilini
1 year ago
சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 08 பேர் கைது!

சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 08 கடை உரிமையாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான பாடசாலைகளுக்கு அருகில் கடைகளை நடத்தி வந்த 08 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரகசிய முகவர் ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் சந்தேகத்திற்குரிய கடை உரிமையாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர்களின் கடைகளில் இருந்த சிகரெட்டுகளும் ஆதாரமாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு அருகாமையில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கு இவர்கள் சிகரெட் விற்பனை செய்துள்ளதாக  தெரியவந்துள்ளது. 

பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'பௌர' நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!