வவுனியா,வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை பௌத்தமயமாக்க திட்டம்! பௌத்த பிக்குவால் பதற்றம்!

#SriLanka #Vavuniya #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வவுனியா,வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை பௌத்தமயமாக்க திட்டம்!  பௌத்த பிக்குவால் பதற்றம்!

வவுனியா,வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று கொழும்பினை சேர்ந்த பெளத்த பிக்கு மற்றும் பெரும்பான்மையின மக்கள் உள்ளடங்கிய குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.  

இவர்களுடன் தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் இராணுவத்தினரும் உடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இராணுவ பாதுகாப்புடன் சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் இது தங்களது இடம் என தெரிவித்து வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், அதன் சூழவுள்ள பகுதிகளையும் நீண்ட நேரம் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதன்போது குறித்த குழுவினரின் கருத்தை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்வீகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் எனவும் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து குழுவினர் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் அருகில் பாதணிகளுடன் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!