இலங்கையின் பல பகுதிகளில் மோசமடைந்துள்ள காற்றின் தரம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Warning #Tamilnews #sri lanka tamil news #air
Dhushanthini K
1 year ago
இலங்கையின் பல பகுதிகளில் மோசமடைந்துள்ள காற்றின் தரம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல மாவட்டங்களில் காற்றின் தரம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

காற்றின் தரக் குறியீட்டின்படி, நுவரெலியா மாவட்டத்தைத் தவிர, தீவின் மற்ற மாவட்டங்களில் காற்றின் தரம் உணர்திறன் உடையவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவில் உள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வறண்ட காலநிலை மற்றும் அயல் நாடுகளில் இருந்து வீசும் தீங்கு விளைவிக்கும் தூசித் துகள்களே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக இதய நோய்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் வெளியில் முகக்கவசம் அணிவது அவசியம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக காட்டுத் தீ, குப்பைகளை எரித்தல் மற்றும் போக்குவரத்து ஆகியவை காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு காரணம் என்று அந்த அமைப்பு கூறியது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!