நாளை முதல் இலங்கையில் அறிமுகமாகும் புதிய பணப்பரிவர்த்தனை முறை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #UPI
Dhushanthini K
1 year ago
நாளை முதல் இலங்கையில் அறிமுகமாகும் புதிய பணப்பரிவர்த்தனை முறை!

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அல்லது UPI செலுத்தும் முறை நாளை (12.02) முதல் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதியின் வழக்கறிஞர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

 இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இது தொடர்பான முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

UPI எனப்படும் இந்திய ஒருங்கிணைந்த கட்டணச் செயல்முறை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் உடனடி பணம் செலுத்தும் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.  

இந்த கட்டண முறையானது மொபைல் போன்கள் மூலம் வங்கிகளுக்கிடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. இதன் மூலம் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் மேம்படும் என வெளிவிவகார அமைச்சர்அலிசப்ரி மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!