தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண பொதுவாக்கெடுப்பு கோர பரிசீலனை!

ஜனநாயக, நியாயமான, நிரந்தரமான அமைதியான அரசியல் தீர்விற்காக தமிழ் மக்களுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளின் பிரேரணை பரிசீலிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் வில்லி நிக்கல், டெபோரா ரோஸ், ஜேமி ரஸ்கின் மற்றும் டேனி கே டேவிஸ், இல்ஹான் ஓமர், சமர் லீ மற்றும் டொன் டேவிஸ் ஆகியோரை சந்தித்துள்ளார்.
தாம் சந்தித்த காங்கிரஸார் தமிழ் மக்களின் வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் எனவும், யுத்தம் நிறைவடைந்து நீண்ட நாட்களாகியும் தமிழ் மக்களின் இன்னல்கள் தீரவில்லை எனவும்
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லெண்ணத்தை பேண வேண்டியதன் அவசியத்தை தமது தீர்மானத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மிக வேகமாக அழித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



