பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!
#SriLanka
#Tourist
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பெப்ரவரி மாதம் முதல் 8 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த ஆண்டு 268,375 சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய குழு இந்தியாவிலிருந்து வந்தது, அவர்களின் எண்ணிக்கை 42,768 ஆகும். மேலும், ரஷ்யாவில் இருந்து 39,914 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 22,278 சுற்றுலா பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 18,016 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



