அவுஸ்திரேலிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ரணில்!

#SriLanka #Australia #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அவுஸ்திரேலிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ரணில்!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். 

ஜனாதிபதி நேற்று (10.02) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக  தெரிவிக்கப்படுகிறது. 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார். தனது விஜயத்தின் போது, ​​07 ஆவது இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றிய ஜனாதிபதி, பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!