இலங்கையின் மூன்று விமான நிலையங்களை கைப்பற்றும் அதானி குழுமம்!

அதானி குழுமம் அதன் முதன்மையான சர்வதேச நுழைவாயிலான கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட தீவு நாட்டில் உள்ள மூன்று விமான நிலையங்களை நிர்வகிக்க இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இலங்கையின் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இரு தரப்புக்கும் இடையில் முறைகள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் நிர்வாக ஒப்பந்தங்களையும் உள்ளடக்கியிருக்கலாம் என்றும் கூறினார்.
இதன்படி கொழும்பில் உள்ள இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றை அதானி குழுமத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களை நிர்வகிப்பதற்கு ஒரு தனியார் கூட்டாளியை இணைக்கும் திட்டம் சுற்றுலாத்துறையில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலைய உள்கட்டமைப்பில், வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு தனியார் பங்குதாரர் உதவுவார் என்று நம்பப்படுகிறது.



