இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மோடிக்கு பறந்த அவசரக் கடிதம்!

#SriLanka #M. K. Stalin #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #NarendraModi
Dhushanthini K
1 year ago
இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மோடிக்கு பறந்த அவசரக் கடிதம்!

தமிழக மீனவர்களை  இனந்தெரியாத நபர்கள்  தாக்குவது  அதிகரித்து வருவது தொடர்பில்  கவலை தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி கைது செய்துள்ள மீனவர்களை விடுவிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.  

கடந்த 28 நாட்களில் 88 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 12 படகுகள் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின்  குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கை அதிகாரிகளால் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறிய அவர், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், அதிகரித்து வரும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை அடையாளம் தெரியாத நபர்களால் கடலில் சேதப்படுத்துவது குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன், ஏனெனில் இது ஏற்கனவே ஆபத்தான சூழ்நிலையில் புதிய கவலையை சேர்த்துள்ளது என்றும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை அரசுடமையாக்குவதை இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் இராஜதந்திர ரீதியில் தீர்வு காண இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உங்கள் உடனடி கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!