பிரதமர் மோடியை சந்திக்கும் சிறீதரன் : முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தகவல்!

#India #SriLanka #Tamilnews #sri lanka tamil news #sritharan #NarendraModi
Dhushanthini K
1 year ago
பிரதமர் மோடியை சந்திக்கும் சிறீதரன் : முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பான கலந்துரையாடல் புதுடெல்லியில் இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 இலங்கையில் இவ்வருடம் பல தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு இலங்கைக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருப்பதால், இந்திய அரசு நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!