குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் அதிரடி படையினரால் கைது!

திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெச்சனகமுவ மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் சீடர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் 24 மற்றும் 37 வயதுடைய பாதுக்க மற்றும் ஹன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அடையாளம் உறுதிப்படுத்த முடியாத 02 மோட்டார் சைக்கிள்கள், மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அதுரிகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



