நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்!

#SriLanka #Electricity Bill #Power
Mayoorikka
1 year ago
நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்!

முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்தாவிடின் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 புதுப்பிக்கத்தக்க மின் நிலைய திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தப்படா விட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

 கடந்த அரசாங்கங்கள் எடுத்த மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் சில தீர்மானங்களின்படி மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளது. 

 செயலிலுள்ள ஆற்றலின் சிறப்பு பயன்பாடுகள் ஊடாக எதிர்கால உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் . இலங்கை மின்சார சபையும் அதனுடன் தொடர்புடைய தனியார் நிறுவனமும் நாட்டிலேயே மிகப்பெரிய சோலார் பேனல் மின் உற்பத்தித் திட்டத்திற்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

 இதன்மூலம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இத்திட்டத்தின் மூலம் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு விசேட பங்களிப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!