அம்பனில் மணல் அகழ்வை நிறுத்த கோரி மக்கள் போராட்டம்!
#SriLanka
#Jaffna
#NorthernProvince
#Protest
Mayoorikka
1 year ago

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
காலை 9:00 மணியளவில் அம்பன் பிரதேச வைத்திய சாலை முன்பிருந்து ஆரம்மான போராட்டம் மணல் அகழ்வு இடம் வரை சென்றுறது.
இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு மணல் அகழ்வை நிறுத்துமாறு கோசமிட்டு வருகின்றனர்.
2010 ஆண்டிலிருந்து இதுவரை சுமார் ஆயிரம் ஏக்கர் பர்ப்பில் நியமங்களுக்கு முரணாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஒருசில ஈபிடீபி உறுப்பினர்கள் குறித்த மணல் அகழ்வு விநியோகம் மேற்கொண்டு வருகின்றனர்.



