இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழீழத்திற்கு சொந்தமானது : சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்து!
#SriLanka
#C V Vigneswaran
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சிங்கள இலங்கைக்கு சொந்தமானவை அல்ல தமிழீழத்திற்கு சொந்தமானது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் சிங்கள அரசாங்கங்கள் மாத்திரமே இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் .மிலிந்த மொரகொடவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டிற்கு மாகாண சபைகள் பொருந்தாது என மிலிந்த் மொரகொட முன்வைத்துள்ள பிரேரனையில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.