சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் போராட்டத்தினை வலுவிழக்கச் செய்த சாணக்கியன்! குவியும் குற்றச்சாட்டு

#SriLanka #Batticaloa #Police #Protest #Attack #sanakkiyan
Mayoorikka
1 year ago
சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் போராட்டத்தினை வலுவிழக்கச் செய்த சாணக்கியன்! குவியும் குற்றச்சாட்டு

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது மக்களோடும் பொலிஸாரோடும் சமரசம் பேசி போராட்டத்தினை வலுவிழக்கச் செய்ததாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் எனும் தொனிப்பொருளில் பொலிஸாரின் பல தடைகளை தாண்டி நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் கறுப்புக் கொடி ஏந்தியவாறு கல்லடி செபஸ்தியன் தேவாலயத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், வேலன்சுவாமிகள் உட்பட பல சமூக செயற்பாட்டாளகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில், குறித்த போராட்டத்தை தடுக்கும் வகையில் பொலிஸார் குவிக்கப்பட்திருந்தனர். 

மட்டக்களப்பு நகரில் உள்ள முக்கிய சந்திகளில் பொலிஸார் துப்பாக்கியுடன் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கல்லடி பாலம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர், கொழும்பில் இருந்து சென்ற கலகமடக்கும் பொலிஸார் குவிந்திருந்ததோடு, நீர்த்தாரை பிரயோக வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. 

 இந்தநிலையில் அங்கு திரண்ட மக்கள் அங்கிருந்து காந்தி பூங்கா வரையில் பேரணியாக சென்று கொண்டிருந்த வேளையில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதன்காரணமாக அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் போராட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் சமரசம் பேசும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தார்.

 அத்தோடு அங்குநின்ற மதகுருமார்களை தரக் குறைவான வார்த்தைகளால் பேசி பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் சமரசம் செய்து போராட்டத்தினை வலுவிலகச் செய்ததாக அவர்மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!