அனுரகுமாரவிற்கு இந்தியா அழைப்பு விடுத்ததன் நோக்கம் என்ன? சலசலக்கும் கட்சிகள்

ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்தியா உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் கட் சி வட்டாரங்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அனுரகுமார இந்தியாவிற்கு நேற்றைய தினம் பயணமாகி அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்திருந்தார். இதனையடுத்து பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிக்களின் தலைவர்களும் இந்த விடையம் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றனர்.
தற்போதைய நிலைமையில் அனுரகுமார தலைமையிலான ஜேவிபிக்கு இந்தியா உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்தமைக்கான நோக்கம் என்ன? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்குள் அங்கம் வகிக்கும் கூட்டணிக்குள் ஆராய்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுடனும் சில தலைவர் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறியுள்ளனர். அத்தோடு நின்றுவிடாமல் இந்திய உயஸ்தானிகரோடும் தொடர்பு கொண்டு இந்த விடையம் தொடர்பில் அறிந்து கொள்ள முற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அண்மையில் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேசியிருந்தார். இதேவேளை இதற்கு முன்னரும் உயர்ஸ்தானிகராக பதவி வகித்த கோபால் பாக்லேயும் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்தநிலையிலேயே நேற்றைய தினம் இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று அனுரகுமார திசாநாயக்க இந்தியா பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



