ஏன் திடீரென அனுரவிற்கு இந்தியா அழைப்பு விடுத்தது? (பிரத்தியேக செய்தி)

#India #SriLanka #China #Election #AnuraKumaraDissanayake #Visit #jvp
Mayoorikka
1 year ago
ஏன் திடீரென அனுரவிற்கு  இந்தியா அழைப்பு விடுத்தது? (பிரத்தியேக செய்தி)

இலங்கையில் ஜேவிபி கட்சிக்கு வர வர ஆதரவு அதிகரித்துக்கொண்டிருப்பது வெளிப்படையாக நாம் பார்க்கும் ஒரு நிகழ்வாகும். 

 அதை நிரூபிக்கும் முகமாக இலங்கையில் பல ஊடகங்களில் உளவுத் துறை செய்தியென ஜேவிபி கட்சி அடுத்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெல்வதற்கு சாதகமான காற்று வீசுவதாக பல ஊடகங்கள் புலம்பித் தள்ளி.

 ஜேவிபிக்கு இது பகல் கனவா? அல்லது நிஜமா? என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இருந்தும் எமது #lanka4 ஊடகத்தின் கணிப்பில் ஜேவிபி கட்சி எதிர் கட்சியாக கூட இலங்கையில் வர முடியாது என்பது ஜதார்த்தமான உண்மையாகும்.

 இதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதற்காக ஜேவிபி கட்சியினர் தன்னலவாதிகள். ஊழல்வாதிகள் என்பது கிடையாது. முறையின்படி மக்களுக்கு தொண்டு செய்ய ஏழைகளின் குறைகளை தட்டிக் கேட்க இப்படி இவர்கள் ஏழைகளினதும் பாட்டாளிகளுக்குமானவர்கள் எனபதில் சந்தேகமே கிடையாது. 

 இருந்தும் வாக்கு வேட்டையாடும்பொழுது மக்கள் மாட்டுவது மற்ற ஒரு சில கட்சிகளிடமே. ராஜ பக்சே குடும்பத்தை நாட்டைவிட்டு துரத்த பின்னும் முன்னும் நின்று குரல் கொடுத்தவர்களில் ஜேவிபி கட்சிக்கு பல பங்கு உள்ளது. 

 அடுத்து தற்பொழுது நாடு உள்ள நிலையில் மக்கள் மற்றும் அரச சார்பு உத்தியோகத்தவரும் தமது குறையை தட்டிக் கேக்க ஒரு பிரம்பு தேவை அதுவும் பலமான பிரம்பு. அது ஜேவிபி ஆல் மட்டுமே ஆகும். அது சார்பாக பார்த்தால் இப்பொழுது இலங்கையில் ஜேவிபி கட்சி ஒரு தவிர்க்க முடியாத கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

 இந்த போக்கை இந்தியா மட்டுமல்ல இலங்கைக்கு அருகில் உள்ள வல்லரசுகளான சீனாவும் கண்காணித்த வண்ணமே உள்ளது. சீனாவுக்கு ஜேவிபி ஆட்சியைப் பிடித்தால் தனது செல்லப் பிள்ளையாக வைத்திருக்கும் என்பது இந்தியாவுக்கு தெரியும். 

 அதனால் இந்தியா இவ்விடையத்தில் முந்திக் கொள்ள விரும்புகிறது. அடுத்து சீனா ஜேவிபியை சீனாவுக்கு அழைத்தாலும் வியப்புக்குரிய விடயம் அல்ல. அழைப்பதற்கு சாத்தியமும் உள்ளது.

 பிரத்தியேக செய்தி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!