நாளை முதல் ஜனாதிபதி ரணில் தலைமையில் ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வுகள்!

#SriLanka #Parliament #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நாளை முதல் ஜனாதிபதி ரணில் தலைமையில் ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வுகள்!

09வது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07.02) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.  

நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

 ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார். 

இதன்படி நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற திறப்பு விழாவை மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இந்த நிகழ்வில் மரியாதை அணிவகுப்பு, மரியாதைக் காட்சிகள், ஊர்வலங்கள் போன்ற எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!