இலங்கை மாணிக்கக்கல் வர்த்தகர் சிஐடியினரால் மாலைதீவில் கைது!
#SriLanka
#Arrest
#Maldives
#Gems
#Bussinessman
Mayoorikka
1 year ago

76 கோடி ரூபா பெறுமதியான மாணிக்க கற்களை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று மாலைதீவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.
மாலைதீவுக்கு தப்பிச் சென்று நான்கு மாதங்கள் தலைமறைவாகியிருந்த மாணிக்கக்கல் வர்த்தகருக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பேருவளை மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு சொந்தமான மாணிக்கக் கற்களை விற்பனை செய்வதாகக் கூறி இந்த வர்த்தகர் அவற்றை எடுத்துச் சென்று மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.



