இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்!

#SriLanka #China #Parliament #speaker #Ambassador
Mayoorikka
1 year ago
இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்!

இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஸு யன்வெய், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை, நாடாளுமன்றத்தில் சந்தித்துள்ளார்.

 இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் ஹன்ஸ அபேரத்ன, சீன தூதரக அரசியல் பிரிவு தலைவர் கிவின் லிகொங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள, பாரம்பரிய சீனப் புத்தாண்டை முன்னிட்டு, சபாநாயகருடன் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதிர்ஷ்டத்தின் அடையாளமாக, சீன மக்களால் கருதப்படும் டிராகன் சிலையும், சபாநாயகருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 இந்த ஆண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக, சீன பிரதித் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!