முல்லைத்தீவில் பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியில் சிக்கி குடும்பஸ்தர் பலி!
#SriLanka
#Mullaitivu
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியிலேயே இன்று (05.020 இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தேன் எடுப்பதற்காக குறித்த நபரும் மேலும் சிலரும் காட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில், படுகாயம் அடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மணவாளன் பட்ட முறிப்பு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பழனி வடிவேல் என்பவரே உயிரிழந்தவராவார்.



