இந்திய உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு! கிழக்கு மற்றும் மலையகம் குறித்து பேச்சு
#India
#SriLanka
#Meeting
#SenthilThondaman
Mayoorikka
1 year ago

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு தனது முழுமையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.



