டில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுரகுமார திசநாயக்க!

#India #SriLanka #Meeting #Delhi #AnuraKumaraDissanayake #Visit
Mayoorikka
1 year ago
டில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த  அனுரகுமார திசநாயக்க!

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

 இந்திய வெளிவிவகாரஅமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். எங்கள் இருதரப்பு உறவுகள் குறித்தும் அதனை மேலும் வலுப்படுத்துதால் உருவாகக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்து இந்த சந்திப்பின்பொது ஆராயப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 இலங்கையின் பொருளாதார சவால்கள் முன்னோக்கிய பாதை குறித்தும் ஜேவிபி தலைவருடனான பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 இந்தியா தனது அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாகவும் சாகர் கொள்கை காரணமாகவும் இலங்கையின் நண்பனாகவும் நம்பகதன்மை மிக்க சகாவாகவும் விளங்கும் என இந்தியவெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!