திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீண்டும் கைது!
#SriLanka
#Arrest
#Police
#prisoner
PriyaRam
1 year ago

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், நேற்று சிறைச்சாலை முகாமில் பணிபுரியும் புனர்வாழ்வு உத்தியோகத்தர் ஒருவரது உந்துருளி மூலம் தப்பிச்சென்ற நிலையில் தெபரவெவ பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பியோடிய, குறித்த நபருக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



