நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
#India
#SriLanka
#Arrest
#Fisherman
Mayoorikka
1 year ago

நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து, குறித்த இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன்போது, குறித்த 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



