மனித வள பற்றாக்குறை! சகலருக்கும் வரி எண் திட்டம் பிற்போடப்படும் சாத்தியம்

#SriLanka #taxes #National Identity Card #Tax
Mayoorikka
1 year ago
மனித வள பற்றாக்குறை! சகலருக்கும் வரி எண் திட்டம் பிற்போடப்படும் சாத்தியம்

18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் வரி எண் வழங்க வேண்டும் என்ற அரசின் தீர்மானம் பிற்போடப்படும் சாத்தியம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 குறித்த விடயம், எதிர்பார்த்ததை விட கடினமானது என்றும், அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றும் ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு 2.5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

 முக்கியமாக, டின் எனப்படும் வரி எண்ணை, எண் பெற தகுதியானவர்களுக்கு, தபாலில் அனுப்ப வேண்டியுள்ளது. அதற்கான தபால் கட்டணத்துக்காக பாரிய தொகை செலவாகும்.

 மேலும், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான மனித வளம் தன்னிடம் இல்லை என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!