அவர்களை துரத்துவோம்: சுதந்திரம் பெறுவோம்! நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

'அவர்களை துரத்துவோம். சுதந்திரம் பெறுவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) சுதந்திர தினத்தன்று நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீர்கொழும்பு மக்கள் சபை ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் முற்பகல் பகல் 10:30 மணியளவில் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை எழுதியிருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
சமூக ஊடகங்களையும் பிரதான ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டமையை கண்டித்தும், மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்னும் இதுபோன்ற பல விடயங்களை சுட்டிக்காட்டியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு பாடல்களை பாடி இசைத்தமையும் குறிப்பிடத்தக்கது.



