வடக்கு கிழக்கில் கரிநாள் அனுஷ்டித்த நிலையில் வவுனியாவில் பறந்த தேசியக் கொடிகள்!

#SriLanka #Vavuniya #Independence #Day
Mayoorikka
1 year ago
வடக்கு கிழக்கில் கரிநாள் அனுஷ்டித்த நிலையில் வவுனியாவில் பறந்த தேசியக் கொடிகள்!

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இன்று (04) சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டித்து வரும் நிலையில், வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

 வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுர சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டாரவன்னியன் சதுக்கம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.

images/content-image/2023/01/1707060429.jpg

 சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, தமிழ் தேசிய அரசியல் கட்சிகளினதும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினதும் ஏற்பாட்டில் சுதந்திர தினமான இன்றைய தினம் வடக்கு, கிழக்கின் சில மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

images/content-image/2023/1707060481.jpg

 இத்தகைய சூழ்நிலையிலேயே வவுனியா நகர வீதியெங்கும் தேசியக்கொடிகளை காணக்கூடியதாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!