களுத்துறை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோட்டம்!

களுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். திருட்டு மற்றும் ஹெரோயின் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் தப்பிச் சென்னறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பொலிஸ் ஜீப்பில் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கதவைத் திறந்ததும் அவருடன் கைவிலங்கிடப்பட்ட மற்றைய சந்தேகநபர் முகத்தில் தாக்கி கைவிலங்குகளை கழற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றில் கடமையாற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள் அவர்களை துரத்திச் சென்ற போதும் சந்தேக நபர் அவர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக அளுத்கம பொலிஸார் மற்றும் பல பொலிஸ் குழுக்கள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



