மக்கள் பட்டினியில் இருக்கும்போது யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள் : பேராயர் கேள்வி!

அடக்குமுறை தலைமைத்துவத்தில் இருந்து நாட்டை விடுவித்து புதிய தலைவரை நியமிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொரளையில் இடம்பெற்ற சிறப்பு ஆராதனையில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தலைவர்கள் யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள்? ஆட்சியாளர்களின் சுதந்திரமா? மக்களின் சுதந்திரமா? வெளிநாட்டில் இருந்து பிரதிநிதிகளை வரவழைத்து, பட்டினியால் வாடும் மக்களை உயரதிகாரிகளின் முன் இழிவுபடுத்துவது சுதந்திரமா?
எங்கள் அழகிய தாய்நாடு துரதிஷ்டமானது, ஒடுக்குமுறை ஆட்சியில் இருந்து நாடு விடுவிக்கப்பட வேண்டும், நாட்டிற்கு சரியான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.



