சுதந்திரத்தினத்திற்கு எதிர்ப்பு : யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது!
#SriLanka
#Jaffna
#Tamilnews
#sri lanka tamil news
#University
Dhushanthini K
1 year ago

இலங்கையின் சுதந்திரத்தினத்தை தமிழர் தாயகப் பகுதிகளில் கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பின் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையான பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.
குறித்த பேரணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த 17 பேருக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. குறித்த உத்தரவுகள் இரவோடு இரவாக உரியவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், அதில் கலந்துகொள்ள ஐவருக்கு எதிராக பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
மேலும் வவுனியாவின் சில வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



