சுதந்திர தின போராட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என ஐவருக்கு உத்தரவு!

#SriLanka #Protest #Court Order #Kilinochchi #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சுதந்திர தின போராட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என ஐவருக்கு உத்தரவு!

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை பெறப்பட்டுள்ளது.  

இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

குறித்த போராட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.  

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் அடங்கலாக ஐவருக்கு எதிராகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.  

போக்குவரத்து, ஒலி மாசுபடல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி கிளிநொச்சி நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஆயினும் போராட்டம் இரணைமடு சந்தியில் 9 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!